BREAKING: காலையிலேயே பரபரப்பு…. கே.என். நேரு வீட்டில் அதிகாலையில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தமிழகத்தில் முன்னாள் திமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து நடத்தி வரும் அதிரடி சோதனைகளின் தொடர்ச்சியாக, தற்போது முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அதிகாலை முதலே தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறு, திருவான்மியூர் மற்றும் திருச்சியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது கே.என். நேருவின் பின்னணியிலும் இந்த ரெய்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.