BREAKING: ரூ. 100 கோடி மோசடி வழக்கு…. அன்பில் மகேஸ் வீட்டில் திடீர் சோதனை…. காலையிலேயே உச்சக்கட்ட பதற்றம்…!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இல்லங்கள் உட்பட மொத்தம் 6 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் இந்த தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் அதனை புதுப்பிப்பதற்கான அரசாணைகளைப் பெற 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக லஞ்ச வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இச்சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நிர்வாகியின் வீடுகளில் அதிகாலையிலேயே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் திமுக வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.