தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது அவர் கங்குவா என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ள நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர கருணாஸ் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து உள்ள நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமவுலி கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, நான் அந்த ட்ரெயினை மிஸ் பண்ணிட்டேன், ஆனா இன்னும் ரயில் நிலையத்தில் தான் நின்று கொண்டிருக்கிறேன், ஒரு நாள் அந்த ரயிலை பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறி ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவி விட்டது குறித்து பேசினார்.
அதாவது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா என்ற திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக சூர்யா தான் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதை வைத்து தான் சூர்யா இவ்வாறு மேடையில் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் ராஜமவுலி, நான் பான் இந்தியா படங்கள் எடுப்பதற்கு ஊந்துகோளாக இருப்பது சூர்யா என பேசியது மட்டுமல்லாமல் மகதீரா பட வாய்ப்பை நீங்கள் மிஸ் பண்ணவில்லை நான் தான் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என்று ராஜமவுலி பேசினார்.
இதனைத் தொடர்ந்து விரைவில் ராஜமௌலி சூர்யா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. தென்னிந்திய திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அவ்வளவு பெரிய இயக்குனர் சூர்யாவை மிஸ் பண்ணி விட்டதாக கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…