யாரும் எதிர்பார்க்காத ஷாக்..! 2031 தேர்தலில் விஜய்க்கு எதிராக சூர்யா.. நீங்க தமிழகத்தை ஆளனும்… வைரல் போஸ்டரால் பரபரப்பு…!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த போஸ்டர்களில், “மாணவர்களைக் காக்கும் தலைவா! நீங்கள் தமிழகத்தை ஆள வேண்டும்… விரைவாய்!!” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் அனைத்தும் வரவிருக்கும் 2031-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலை மையப்படுத்தி ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் ஏற்கனவே அரசியலில் தடம் பதித்து, தவெக கட்சி மூலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழ்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள், 2031 தேர்தலில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சூர்யா களம் காண வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.