#image_title
நடிகர் சூர்யாவும், கார்த்திக்கும் இனி தங்களது சொந்த புரொடக்ஷன் கம்பெனியான 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பலம்பெறும் நடிகர் சிவகுமார். மிக பிரபலமான கண்ணியமான நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர். இவர்களின் இரண்டு மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்திக். தனது தந்தையின் பெயருக்கு களங்கம் வந்து விடாமல் தற்போது வரை சிறப்பாக சினிமாவில் நடித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா ஆரம்பத்தில் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தொடர்ந்து தற்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.
அதேபோல நடிகர் கார்த்திக்கும் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்கள். நடிகர் சூர்யா தற்போது கங்குவார் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதேபோல நடிகர் கார்த்திக்கும் தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து 2d என்ற என்டர்டைன்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலமாக ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா இனிமேல் 2d என்டர்டைமென்ட் நிறுவனம் சார்பாக எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதேபோல நடிகர் கார்த்திக்கும் அப்படி ஒரு முடிவைத்தான் எடுத்திருக்கின்றார்.
நடிகர் கார்த்திக் நடித்திருக்கும் பல படங்கள் 2d என்டர்டெயின்மென்ட், ஸ்டுடியோ கிரீன், ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் உள்ளிட்ட அவர்களின் உறவினர்களின் தயாரிப்பில் தான் தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கின்றார். இனிமேல் இவர்களை எல்லாம் தவிர்த்து வேறு நிறுவனங்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறப்படுகின்றது. இதற்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கின்றது என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
அதாவது சூர்யா 2d என்டர்டைன்மெண்டில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கும் கார்த்திக் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கும் பின்னால் இருப்பது ஒரே காரணம் தானாம். தற்போது சாட்டிலைட் பிசினஸ் தரமட்டம் ஆகிவிட்டது. அதனால் படம் எடுக்கும் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் நம்ம நிறுவனத்தில் நம்ம நடிச்சாலும் சாட்டிலைட் பிசினஸில் லாபம் இல்லை என்பதால் நஷ்டம் ஏற்படும். அவர்களை காப்பாற்றுகிற நோக்கத்தில் தான் அவர்கள் தயாரிப்பில் அடிப்பதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…