இத்தனை கோடியா ? கங்குவா படத்தின் ஓ.டி.டி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

By Deepika

Published on:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு பெரும் தொகையை கொடுத்து இதை அவர்கள் வாங்கியுள்ளார்கள்.

Suriya in kanguva

தமிழ் சினிமாவில் வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் தான் கங்குவா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.

   
Suriya in Kanguva

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் தயாராகி உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். கங்குவா பட ஷூட்டிங் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

Kanguva Team

கங்குவா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன் கூடிய அந்த டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் கங்குவா படத்தின் கதைக்களும் தெரியவந்து உள்ளது. அதன்படி 1700-களில் வாழ்ந்த ஒருவர், அப்போது முடிக்க முடியாமல் போன ஒரு விஷயத்தை 500 ஆண்டுகள் கடந்து வந்து நிகழ்காலத்தில் அதை முடித்தாரா? இல்லையா? என்பது தான் கதைக்கருவாம்.

Kanguva OTT rights sold

அதுமட்டுமின்றி கங்குவா படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி கொடுத்து கங்குவா பட ஓடிடி உரிமையை வாங்கி உள்ளதாம். நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக தொகைக்கு விற்பனையான படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

author avatar
Deepika