பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட்டான புறநானூறு படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் சூர்யாவின் 44-ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ், 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து சூர்யாவின் 44-வது படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வருகிற 2025 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் சூர்யா 44-வது படத்தின் கதையை ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் சமயத்தின் போது கூறியிருந்தாராம்.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69-ஆவது படத்தை இயக்கப் போவது இல்லை என்பது உறுதியானது. இதனால் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளாராம். படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.