சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மற்றும் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ், விதார்த், பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
தற்போதைய இப்படத்தை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படம் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த சுதா கொங்கரா அவர்கள் சூர்யாவுடன் இணைந்து அடுத்த படம் இயக்கப் போவதாக தகவல் தெரிய நிலையில், தற்போது நேற்று இரவு சுதா இப்படத்தை சிறிது காலம் தள்ளி வைப்பதாக இணையத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். ஆனால் சமூக வலைதளத்தில் சூர்யாக்கும் சுதா கொங்கராவுக்கும் சில கருத்து வேறுபாடல் இப்படம் டிராப் ஆகிவிட்டது என்று தகவல் கசிந்துள்ளது.
இதற்கு முன்னால் வெற்றிமாறன் கூட்டணியில் சூர்யா இணைந்த வாடிவாசல் படம் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. ஆனால் சில பல பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்றும் சூரி இணைய போவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து பல வருடம் கழித்து மாபெரும் கூட்டணியாக வணங்கான் படம் மூலம் பாலாவுடன் இணைந்த சூர்யாவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது பாலாவுடன் ஏற்பட்ட சில பிரச்சனையால் இப்படத்தில் சூரிய வெளியேறி அருண் விஜய் அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது சுதா சூர்யாவிடம் சொல்லிய கதையை பலமுறை மாற்றம் செய்துள்ளாராம் சூர்யா, அதனால் கடுப்பான சுதா, சூர்யா கூட்டணியில் இருந்து விலகி உள்ளார் என்று தெரியவந்துள்ளது. வாடிவாசல் வணங்கான் இரு படங்களும் கைவிட்ட நிலையில் சூர்யாவின் அடுத்த பெரிய ப்ராஜெக்ட் ஆக எதிர்பார்க்கப்பட்ட ஒரே படம் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படம் தான், ஆனால் இப்படமும் தற்போது சூர்யாவின் கைவசம் இல்லை என்று தகவல்கள் பல கசிந்து வருகிறது.
#Suriya43 #Puranaanooru @Suriya_offl pic.twitter.com/343EMc2YsJ
— Sudha Kongara (@Sudha_Kongara) March 18, 2024