சூர்யா இல்லாமலே படத்தை துவங்கிய சுதா கொங்கரா.. வெற்றிமாறனுக்கு வந்த நிலைமை உங்களுக்கு வராம இருந்தா சரி..

By Ranjith Kumar on பங்குனி 4, 2024

Spread the love

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர் பெரிதும் ஆதரவு தெரிவித்த வந்த நிலையில், சூர்யா அதைக் கண்டு ரசிகர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார். சுதா கொங்காராவும் சூர்யாவும் இணைந்து மறுபடியும் படம் இயக்கி வருகிறார்கள். ஆனால் சூர்யா இல்லாமலே இப்ப படப்பிடிப்பு துவங்கியுள்ளதாம். நீண்ட வருடமாக எடுக்கப்பட்டு வரும் படம் தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் “கங்குவா”. படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட பேன் இந்திய அளவில் இப்படம் பேர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சி.ஜி, வி.எஃப்.எக்ஸ் வொர்க் எல்லாம் மிக அருமையாக உள்ளதாம். தற்போது படப்பிடிப்பு முடித்து டப்பிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சூர்யா அவர்கள் சுதா கொங்காரா அவருடன் மீண்டும் இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் வேலை நடந்து கொண்டிருக்கிறது, இரு தினங்களுக்கு முன்னால் மதுரையில் வைத்து சுதா கொங்காரா அவர்கள் படப்பிடிப்பு துவங்கி விட்டாராம், ஆனால் சூர்யா இல்லாமலே ஆரம்பித்திருக்கிறார்.

   

டிசம்பர் மாசம் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ரசிகர்கள் செய்த உதவியை மறக்க முடியாமல் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இதற்காக களத்தில் இறங்கிய ஒட்டுமொத்த ரசிகர்களை அழைத்து பெரிய விருந்து ஒன்று வைத்துள்ளார். அதில் முக்கியமாக மக்களை தாண்டி வாயில்லா ஜீவன்களுக்கு ஆதரவளித்த ஒரு ரசிகனை அழைத்து சால்வை போர்த்தி பெரிய பரிசு ஒன்று கொடுத்து அவரைப் பாராட்டி உள்ளாராம் சூர்யா.

   

அதனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவால் வர முடியவில்லை. மதுரையில் படப்பிடிப்பு முடிந்த பின் அரியானாவில் வைத்து மீதி படத்தை இயக்கு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது