அடிஆத்தி, கன்னத்தில் குழியை உண்டாக்க… வாய்வழியே பெண் செய்த அறுவை சிகிச்சை… இணையத்தையே அதிர வைக்கும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அழகின் புதிய வடிவங்களை நோக்கி மனிதர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த அளவிற்கு சென்று தங்கள் அழகை மெருகூட்டுகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் டிம்பிள் பிளாஸ்டி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னத்தில் குழி விழுவது என்பது இயற்கையானதாக இருந்தாலும் தற்போது பலர் அந்த அழகி அம்சத்தை அறுவை சிகிச்சை மூலமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். Dimpleplasty எனப்படும் இந்த நடைமுறையில் மருத்துவர் கன்னத்தின் உள்ளே சிறிய வெட்டு செய்து குழிபோல ஒரு வடிவமைப்பை உருவாக்குகின்றார்.

இதனால் வெளிப்புறத்தில் பார்க்கும்போது இயற்கையான கன்னத்தில் இருக்கும் குழி போலவே தோன்றுகிறது. குழிகளை உருவாக்கும் அறுவை சிகிச்சை பற்றி உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வியுடன் தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் சிரிக்கும் போது உருவாகும் இயற்கை போன்ற குழி பலரையும் கவர்ந்துள்ளது. அது அழகாக தோன்றினாலும் அறுவை சிகிச்சை மூலமாக அவற்றை உருவாக்குவது ஆபத்தானது தான். இயற்கையை மீறி அழகை அடையும் முயற்சிகள் தற்போது அதிகளவு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.