நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட டப்பிங் பணிகளை அஜித் முடிந்த நிலையில் தற்போது பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஆனால் விடா முயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவித்த படக்குழு அதற்கான வேலைகளை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படபிடிப்பு முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்து விட்டதாக படக்குழு அறிவித்தனர். இந்த படத்தில் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ சவதீகா ‘ லிரிக் வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த செய்தியை ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், விடாமுயற்சி குறித்து இதுவரைக்கும் எந்த ஒரு தெளிவான அப்டேட்டும் எனக்கு தெரியாது. வருமா வராதான்னு கூட என்கிட்ட யாரும் சொல்லல. படம் வருதுன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒரு முடிவு எடுத்து இருப்பேன். எதையும் தெளிவா சொல்லல. இதனால் லைகா ப்ரொடக்ஷன் மேல எனக்கு ஒரு முரண் இருக்கு.
விடாமுயற்சி வருது வரவில்லை என்று முன்னாடியே சொல்லி இருந்தா மத்த படங்கள் ஏதாவது அந்த தேதியில் வந்திருக்கும். எதுவுமே இல்லாம இப்படி ஒரு வாரத்துக்கு முன்னாடி அறிவிச்சா யாரால என்ன பண்ண முடியும். ஒரு படம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி நிறைய வேலை இருக்கு. இப்படி இருக்கும் போது விடாமுயற்சி குறித்து முன்பே அப்டேட் கொடுத்து இருந்தா மத்த படங்கள் வெளிய ஆவதற்கான வேலைகளை அந்த டீம் பார்த்து இருப்பாங்க. இது எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு இடையே உள்ள சிக்கல்தான். தயாரிப்பாளர்கள் இதில் சரியாக இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க எங்க தப்புதான். இதுல வேற யாரையும் குறை சொல்ல முடியாது என்று சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…