அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. 70 சதவீத படபிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக தொடங்கியது. ஆபரேஷன் செய்து கொண்ட அஜித் ஓய்வெடுக்க போகிறார் என்று இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் நண்பரும் மேலாளருமான சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, அஜித் சாரை பொருத்தவரை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு உடனே ஓகே சொல்ல மாட்டார். முன்னதாக வாக்கு கொடுத்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் கமிட்மெண்டை முடித்துவிட்டு தான் இன்னொரு கம்பெனிக்கு வருவார். லைக்கா நிறுவனத்திற்கு வேறு சில பிரச்சனை இருந்தது. இதனால் 70% படபிடிப்பை அங்கு முடித்து விட்டோம். ஒரு சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போனது. பிப்ரவரி மாதமே ஷூட்டிங் முடித்துவிட்டு ஒரு சில மாதம் ஓய்வெடுத்து விட்டு குட் பேட் அக்லி படத்தில் நடிக்கலாம் என முடிவு இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதமானது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஐந்தாம் தேதியிலிருந்து அஜித் சார் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் உழைக்கிறார். குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படத்தின் ஷூட்டிங்கிலும் அஜித் கலந்து கொள்கிறார். சொல்லப்போனால் 20 வருஷங்களுக்கு பிறகு அஜித் சார் இப்படி நடிக்கிறார். எப்படியாவது படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். அவரது கவனம் இரண்டு படங்களையும் முடித்துக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

அஜித் சாருக்கு மூளையில் ரத்தக்கட்டி இருக்கு ஆபரேஷன் பண்ணனும் என்ற செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. அதெல்லாம் பொய். அவருக்கு நடந்தது ஆபரேஷன் இல்ல. ஒரு புரோசிஜர் தான். ஆப்ரேஷன் என்பது மேஜரான விஷயம். ஆனால் அஜித் சாருக்கு நடந்தது ஆஞ்சியோகிராம் பண்ற மாதிரி சின்ன புரோசீஜர் தான். முன்னாடி நடிச்ச ஒரு பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தால் இந்த பிரச்சனை வந்திருக்கு. அவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்டது. இது வெறும் வார்த்தை கிடையாது. அவளது அனுபவம். அதான் உண்மை என சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

