அடுத்த பரபரப்பு… சுக்குநூறாக உடையும் அதிமுக… ஒரே நேரத்தில் திமுகவில் இணைந்த 500க்கும் மேற்பட்டோர்… செம குஷியில் ஸ்டாலின்…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணையிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது குறித்து பேசிய மருது அழகராஜ், புறக்கணிக்கக் கூடிய துரத்தி அடிக்கக்கூடிய அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு அண்ணா அறிவாலயம் அன்பு சரணாலயம் ஆக மாறி இருக்கிறது. தனது ஆதரவாளர்கள் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உட்பட 500 பேர் திமுகவில் இணைந்ததாக அவர் கூறினார்.