சற்றுமுன் பரபரப்பு…. EPS போட்ட மெகா ஸ்கெட்ச்…. விஜய் அரசுக்கு கொடுத்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்ற அதிமுக MLA….!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுகுமார் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். முன்னதாக எஸ்.பி. வேலுமணி அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (EPS) அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சுகுமாரிடமிருந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்த நிலையில், தற்போதைய இந்த திடீர் சமரசத்தைத் தொடர்ந்து, மீண்டும் அதே மாவட்டச் செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.