பார்லிமென்டில் மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் (AITC) கட்சி இரண்டாகப் பிரிந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அக்கட்சியின் அதிருப்தி அணியினர், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்கத் திடீர் முடிவு செய்துள்ளனர். மேலும், தாங்கள் தான் உண்மையான திரிணாமூல் காங்கிரஸ் எனக் கூறி லோக்சபா சபாநாயகரிடம் அவர்கள் முறைப்படி கடிதம் வழங்கியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், திரிணாமூல் காங்கிரஸின் லோக்சபா குழு தலைவர் பதவியிலிருந்து அபிஷேக் பானர்ஜியை அதிரடியாக நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகக் ககோலி கோஷ் தஸ்திதாரை நியமிக்குமாறு அதிருப்தி அணியினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திடீர் அரசியல் நகர்வும், மம்தா பானர்ஜிக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
