“இறந்த குழந்தை மீண்டும் பிழைக்கும்” சடலத்தின் மீது உப்பை போட்டு… பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த தங்களது சிறுமியின் சடலத்தை உப்பில் புதைத்து, காதில் குர்ஆன் துதியை ஒலிக்கவிட்டு உயிர் வரும் என பெற்றோர்கள் 2 மணி நேரம் காத்திருந்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. அமினா என்ற அந்தச் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நவநகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், குழந்தையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள், நீரில் மூழ்கி இறந்தவரை உப்பில் புதைத்தால் மீண்டும் உயிர் பெற்றுவிடுவார் என்ற மூடநம்பிக்கையை நம்பியுள்ளனர். இதனால், மருத்துவமனைக்கு வெளியிலேயே குழந்தையின் முகம் மட்டும் தெரியும்படி உடலை உப்பில் புதைத்து வைத்தனர். அதோடு நில்லாமல், தங்களது மொபைல் போனில் குர்ஆன் துதியை ஒலிக்கச் செய்து, அதைச் சிறுமியின் காதருகே வைத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

   

ஆனால், எந்தவித அசைவோ அல்லது அற்புதமோ நிகழாததால் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவர்கள் அவர்களுக்குப் புரியவைத்து, சடலத்தை மீட்டெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆபத்தான சூழலில் இருப்பவர்களை இது போன்ற மூடநம்பிக்கைகளை நம்பி தாமதிக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.