#image_title
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். ஐஸ்வர்யா 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் செளந்தர்யா கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டாரின்மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா , தனுஷ் இருவரும் தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இளையமகளான செளந்தர்யா கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.
ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து 2019ல் விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் . இந்த ஜோடிக்கு 2022ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழாவை தடபுடலாக கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான டர்ப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி உள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். இதில் ரஜினியின் மனைவி லதா உள்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் தீமில் கொண்டாடப்பட்ட இந்த பர்த்டே பார்ட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…