#image_title
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆர்யா 2, S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி, சர்ரைனோடு ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம், DJ, துவ்வாடா ஜகன்னாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலு உள்ளிட்ட பல ஹிட்டு படங்களை கொடுத்திருக்கின்றார்.
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டு நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் என்று அழைக்கப்படுவது நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். தான் அவரது தம்பிகள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண். இவர்கள் இருவரும் நடிகர்களாகவும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றன. பவன் கல்யாண் ஜனசேனா என்கின்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆந்திர சட்டசபை தேர்தலில் பாஜக தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த கட்சிப் போட்டியிடுகின்றது.
இந்த கட்சியின் பொதுச்செயலாளராக நாகேந்திர பாபு இருக்கின்றார். சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவின் அண்ணன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தன். இவரது மகன்தான் அல்லு அர்ஜுன். இப்படி குடும்பமே அரசியலிலும், சினிமாவிலும் மிகப்பெரிய நபர்களாக வலம் வந்து வருகிறார்கள். ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் எதிரி கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடுபவர் ரவிச்சந்திரன் கிஷோர்.
இவர் அல்லு அர்ஜுனின் நண்பர் ஆவார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தார். இந்த விவகாரம் சிரஞ்சீவி குடும்பத்தினரை மிகவும் கோபமடைய செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட நாகேந்திர பாபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அர்ஜுன் பெயரை குறிப்பிடாமல் போட்டியாளர்களுடன் கைகோர்க்கும் மனிதனை நம்முடைய சொந்தக்காரனாக கருத முடியாது.
நம்மை ஆதரிக்கும் வெளி நபர்களை நாம் குடும்பமாக கருதுவோம் என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நாகேந்திர பாபுவை விமர்சனம் செய்து வந்தார்கள். இப்படி சிரஞ்சீவி குடும்பத்தினருக்கும், அல்லு அர்ஜுனனுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது வெளி உலகத்திற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…