Categories: சினிமா

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..? பிரபலம் சொன்ன தகவல்..!

Spread the love

ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கமலஹாசன் தானாம். ஹரி இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஐயா. சரத்குமார் இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் தான் நடிகை நயன்தாரா அறிமுகமானார். தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் மிகப்பெரிய நடிகையாக வளம் வரும் நயன்தாராவுக்கு ஆரம்ப சுழி போட்ட திரைப்படம் இதுதான். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஐயா துறை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது மிகவும் பிரபலமானது.

மேலும் பிரகாஷ் ராஜ், நெப்போலியன், ரோகிணி, வடிவேலு, எஸ்என் லட்சுமி, சார்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை முதலில் இயக்குனர் ஹரி சரத்குமார்-காக எழுதவில்லையாம். முதன் முதலில் ஐயா படத்தின் கதையை எழுதியபோது கமலஹாசனை மனதில் வைத்து தான் இந்த திரைப்பட கதையை எழுதினாராம்.

தயாரிப்பாளர் ஞானவேல் அழைத்துச் சென்று இந்த கதையை முதன் முதலில் கமலஹாசன் இடம் தான் கூறினாராம். ஆனால் கமலஹாசன் இப்படத்தை தேவர் மகன் போல் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று கூறி கதையில் சிறிய மாற்றங்களை செய்ய முற்பட்டு இருக்கின்றார். இது ஹரிக்கு சரியாக படவில்லை என்பதால் ஹரி பின்னர் சரத்குமாரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.

ஹரியின் கதை எப்போதுமே ஒரு நடிகரை சார்ந்திருக்காது என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கமர்சியல் படங்களை எடுத்து வந்தவர் ஹரி. தற்போது ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுத்து வருகின்றார். அந்த சமயத்தில் நடிகர் கமலஹாசன் ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்னொரு தேவர் மகன் போல் இருந்திருக்கும் என்று தயாரிப்பாளர்ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago