தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தன்னுடைய அயராத உழைப்பால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு ரஜினி பட்ட கஷ்டங்கள் ஏராளம். முதன் முதலில் இவர் சினிமாவில் அறிமுகமானது முதல் அதன்பிறகு நடித்த படங்கள் என பல படங்களில் பல அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்ததால் இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். முதன்முதலில் ரஜினி கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
திரைப்படக் கல்லூரியில் சிவாஜி ராவ் என்று பெயர் கொண்ட ரஜினியை கே பாலசந்தர் சந்தித்த நிலையில் அவருக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கடந்த 1975 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, நாகேஷ் மற்றும் ரஜினி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் முதல் நாள் சூட்டில் நடிப்பதற்கு ரஜினிக்கு அழைப்பு வந்திருந்த நிலையில் அதிகாலை நேரம் ஆக வர சொல்லி இருந்தனர். இதற்காக இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருந்த ரஜினி தன்னை அறியாமலே தூங்கி அதிகாலையில் விரைவில் எழுந்து கொண்டார்.
பிறகு தனக்கு வந்த காரில் ஏறிக்கொண்டு சூட்டிங் சென்றபோது முதல் நாள் கமல்ஹாசனை பார்த்து உங்களுடைய பல படங்களை பார்த்து நான் ரசித்திருக்கிறேன் என்று கூற கமலும் நன்றி தெரிவித்தார். பிறகு அங்கு வந்த நாகேஷ் மற்றும் ஸ்ரீதேவியிடம் சிவாஜி ராவை கமல் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நான் சிகரெட்டை ஸ்டைலாக சுத்தி விட்டு வாயில் பிடிப்பேன் என்ற சிவாஜி ராவ் கூற அதை கண்டு அங்கிருந்த அனைவருமே பாராட்டினர். உடனே கே பாலசந்தர் நான் சொல்வதை மட்டும் நீ நடித்தால் போதும் என்று கூறி முதல் நாள் சூட்டிங் அழைத்துச் சென்றார். முதல் காட்சியே கதவை உடைத்துக் கொண்டு ஸ்ரீதேவி வீட்டுக்குள் செல்வது போன்று படமாக்கப்பட்டது. அதில் சிவாஜி ராவ் அற்புதமாக நடித்திருந்த நிலையில் அடுத்ததாக மாடியில் கமல் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது கமல் கையில் இருக்கும் சாவி தவறி கீழே விழுந்து விடும்.
அது எங்கே என்று எட்டிப் பார்க்கும்போதே கீழே சிவாஜி ராவ் நின்று கொண்டிருக்கும் போது நீ யார் என்று கமல் கேட்க நான் தான் ஸ்ரீதேவியின் புருஷன் என்று சிவாஜி ராவ் கூறுவார். அந்த வசனம் அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது. இந்த வசனத்தை பேச அதற்கு முன்பு 100 முறை பேசி பார்த்து உள்ளார் சிவாஜி ராவ். அதுமட்டுமல்லாமல் கே பாலசந்தர் டேக் என்ற சொல்லும் போது பேசவே முடியாமல் சிவாஜி ராவ் நின்றுள்ளார். காரணம் நாகேஷ் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கே பாலசந்தர் அவரை திட்டி விட அதன் பிறகு நாகேஷ் சிவாஜி ராவை அழைத்து எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு அபூர்வராகங்கள் திரைப்படத்தில் நடித்து முடித்த சிவாஜி ராவை அழைத்து கே பாலசந்தர் ஏற்கனவே சிவாஜியின் என்ற பெயர் மக்கள் மத்தியில் பரிச்சியமாக உள்ளது உனக்கு ரஜினிகாந்த் என்று பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி அந்த பெயரை வைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு டப்பிங் பேச ரஜினி வந்ததும் முதல் முறையாக தன்னுடைய காட்சிகளை டப்பிங் ஸ்டூடியோவில் ஸ்கிரீனில் பார்த்து பூரித்து போனார். அப்போது அங்கு கே பாலசந்தர் வந்த நிலையில் அவர் வந்ததும் டப்பிங் பேச முடியாமல் திணறிய ரஜினி நீங்க வெளிய போங்க அப்பதான் நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டு டப்பிங் பேசி முடித்தார். அதன் பிறகு கே பாலசந்தர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ரஜினி சினிமாவில் சூப்பரான ஒரு நடிகராக வரப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இந்த படத்தோடு உன்னை விட்டு விடாமல் அடுத்தடுத்த படங்களிலும் நான் உனக்கு வாய்ப்புத் தந்து உன்னை ஒரு நடிகராக வளர்த்து விடுவேன் என்றும் ரஜினிக்கு உறுதி அளித்துள்ளார்.
சொன்னதைப் போலவே அடுத்தடுத்து கே பாலசந்தர் இயக்கிய படங்களில் ரஜினிக்கு என்றே ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கி அவருக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். குறிப்பாக மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினிக்கு அமைக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருந்ததால் அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடைபெற்ற போது கே பாலசந்தரின் அசோசியேட்டட் ஈறங்கி சர்மா என்பவர் தான் ரஜினி ஒரு அறையில் தங்கி இருந்தார். அப்போது ரஜினி ஒரு நாள் கூட அவரை தூங்க விட்டது இல்லையாம். அதாவது இரவில் பலமுறை எழுப்பி நான் சினிமாவில் ஒரு நடிகராக வந்து விடுவேனா என்று அவரிடம் கேட்டுக் கொண்டு தொல்லை செய்து கொண்டே இருப்பாராம். இதனை ஒரு கட்டத்தில் ஷர்மா கே பாலச்சந்தரிடம் கூறி ஒன்று அவனோட ரூம மாத்திடுங்க இல்ல என்னோட ரூமை மாத்திடுங்க நைட் ஃபுல்லா தூங்க விடாமல் தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கா என்று சொல்லி உள்ளார்.
ஆனால் இப்படி புகார் அளித்த அவர்தான் ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போடும் ஸ்டைலை படத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கே பாலசந்தரிடம் கூறியுள்ளார். நீ மட்டும் நல்லா தமிழ் பேச கத்துக்கோ உன்ன நான் எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுகிறேன் என்று கே பாலசந்தர் கூற ரஜினியும் அவ்வாரே செய்தார். இன்று ரஜினி மிகப்பெரிய உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு வித்திட்டு வளர்த்தவர் கே பாலசந்தர்தான். ஆனால் அதற்கான புகழ்த் தனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் ஒரு நாளும் நினைத்தது கிடையாது. ரஜினி ஒரு நடிகராக வேண்டும் வளர வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை. அதற்கு தான் நான் சற்று உறுதுணையாக இருந்தேன் என்று கே பாலசந்தர் பலமுறை கூறியிருக்கிறார். இன்று சூப்பர் ஸ்டாராக சினிமாவில் ரஜினி இருக்கிறார் என்றால் அதற்கு விதை போட்டவர் கே.பாலசுந்தர்தான்.
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…