நம்ம ‘சூப்பர் சிங்கர்’ விருஷாவா இது…? பாக்க டாப் ஹீரோயின் போல இருக்கீங்க… Gorgeous கிளிக்ஸ்…

By Begam on கார்த்திகை 18, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆனது பல்வேறு சீசன்களை கடந்து ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

   

தற்பொழுது ஜூனியர் சீசன் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பிரபலங்களாக வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.

   

 

இந்த மேடை பல்வேறு பிரபலங்களை இதுவரை உருவாக்கி தந்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும் பிரபல இசையமைப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர். இப்படி பிரபலமானவர்களின் பட்டியலில் நிறைய பேர் உள்ளனர். செந்தில்- ராஜலட்சுமி, சிவாங்கி இன்னும் பலர் உள்ளனர்.

அடையாளம் தெரியாமல் இருந்து வந்து சின்ன திரையில் காலடி எடுத்து வைத்து, தற்பொழுது வெள்ளி திரையில் பாடகர்களாகவும், நடிகர்களாகவும் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி கலக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடகிகளில் ஒருவர்தான் விருஷா. இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்பொழுது கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சூப்பர் சிங்கர் விருஷாவா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.