சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்கள் ஏராளம்.

அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ரீநிஷா ஜெயசீலன்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் குட்டி பெண்ணாக பங்கேற்று தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார். இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதால் சோசியல் மீடியாவில் இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கே பி சுந்தராம்பாள் வாய்ஸில் கலக்கிய தேனிசை என்றும் பலரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியா என பல நாடுகளுக்குச் சென்று பாடியுள்ளார்.

சென்னையை சேர்ந்த இவர் எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து காதலும் கடந்து போகும், இமைக்கா நொடிகள், தமிழ் படம் 2 மற்றும் புலிக்குட்டி பாண்டியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடல்களை பாடி வருகிறார். தற்போது இவர் பல திரைப்படங்களிலும் கமிட் ஆகி பிசியான பாடகியாக மாறிவிட்டார்.இவர் பாடியிருக்கும் படங்களின் பாடல்கள் எல்லாம் விரைவில் திரைக்கு வெளியாக உள்ளன.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிறைய ஆல்பம் பாடல்களிலும் இவர் தொடர்ந்து பாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரீநிஷா ஜெயசீலன்.

இவர் தற்பொழுது முத்துமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கங்களில் கவிதைகளை வாரி இறைத்து வருகின்றனர்.
