ஒன்னு தெரியாத பச்ச மண்ணுக்கிட்ட போய் இத குடுத்துருக்கீங்களே.. பயத்தில் நடுங்கிய ஷிவாங்கி (வீடியோ)..

By Nanthini on செப்டம்பர் 25, 2023

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

   

இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார். தற்போது குக்  வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். விஜய் பிரபலங்களில் டாப் இடத்தில் வந்த சிவாங்கி கோமாளியாக இருந்து தற்போது போட்டியாளராக குக் வித் கோமாளி சீசன் 4நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

   

 

தற்போது சிவாங்கி வெளியிட்டுள்ள வீடியோவில் அவருக்கு ஒருவர் சமையல் பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது எப்படி மீன் வெட்ட வேண்டும் என்று ட்ரெயினிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சிவாங்கி சைவம் என்பதால் மீனை தொட்டு விட்டு பதறிக் கொண்டு ஓடி உள்ளார். அந்த வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sivaangi Krishnakumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sivaangi.krish)