பாட்டு எழுத வராத நா.முத்துக்குமார்.. இயக்குனர் ஹரியே களத்தில் இறங்கி எழுதி ஹிட்டான பாட்டு..!!

By Priya Ram

Published on:

பிரபல இயக்குனரான ஹரி கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து சாமி, கோவில், ஐயா, தாமிரபரணி, வேல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களை சார்ந்த திரைப்படங்களை ஹரி இயக்கியுள்ளார்.

   

இதில் ஹரி இயக்கிய தாமிரபரணி திரைப்படம் கடந்த 2007- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பிரபல நடிகர் விஷால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பானு நடித்துள்ளார். மேலும் பிரபு, நதியா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை நா.முத்துக்குமார் தான் எழுதியுள்ளார். ஆனால் படத்திற்கான கடைசி பாட்டு எழுத வேண்டிய சமயத்தில் பிற படங்களில் பிஸியாக இருந்ததால் நா முத்துக்குமாரால் ஒரு பாடலை மட்டும் எழுத முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஹரி இசையமைப்பாளரிடம் ட்யூனை மட்டும் கேட்டு பாடலை எழுதியுள்ளார்.

தாய்மாமா மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் விஷால் மாமன் மகளையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். அப்படி ஹரி எழுதிய பாட்டு தான் தாலியே தேவையில்லை பாடல். இந்த பாடலை ஹரிஹரனும் பவதாரணி இணைந்து சிறப்பாக பாடினார்கள். அவர்கள் நினைத்தபடியே தாலியே தேவையில்லை பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

author avatar
Priya Ram