ஒரு நாளுக்கு இவ்ளோவா..! எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகிகள் வாங்கும் சம்பளம் எவ்வளோ தெரியுமா..?

By Mahalakshmi

Updated on:

சன் தொலைக்காட்சியில் மக்களால் அதிகம் பார்க்கப்படும்  சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில் மாரிமுத்து மறைவுக்கு பின் தட்டுத்தடுமாறிய நிலையில்  TRPயும்  குறைய தொடங்கியது.

   

மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் பெண்கள் சுதந்திரம் குறித்து, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அழுத்தமாக பேசப்படுகிறது.

இதனாலே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியலாக இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிகளாக ஜொலித்து வரும் கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்ரியா போன்றவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் நாயகிகளாக விளங்கம் இவர்களின் சம்பளம் குறித்து தான் தற்போது பார்க்க விருக்கிறோம்.

ஒரு நாளைக்கு இவர்கள் வாங்கும் சம்பளம் ஆச்சிரியப்படும் அளவிற்கு  இருக்கிறது. கதையின் முக்கிய நாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா ஒரு நாளைக்கு ரூ. 15,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதே போல் நடிகை கனிகா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். மேலும் பிரியதர்ஷினி ரூ. 10,000 ஆயிரம் மற்றும் ஹரிப்ரியா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Mahalakshmi