நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் தமிழ் திரை உலகில் பெரிய இயக்குனராகவும் நல்ல நடிகனாகவும் வலம்வந்தவர். அவர் தற்போது எப்பிடத்தையும் இயக்குவதும் மற்றும் நடிக்காமல் இருந்தாலும், அவர் சினிமா துறையின் அறிமுகமான காலகட்டத்தில், சுந்தர்ராஜன் இயக்கிய பல படங்கள் வெற்றி படமாக மாறி இருந்தது, அதில் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த படமான
நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா, போன்ற ஹிட் படங்களை சுந்தரராஜன் இயக்கியதுதான்.
நடிகர் சுந்தர்ராஜன் அவருக்கும் நடிகர் கவுண்டமணி அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு, வைதேகி காத்திருந்தாள் படம் மூலம் இவர் இருவருக்கும் நட்பு உருவானது, அப்படத்தின் காமெடி இப்ப வரை பேசப்பட்டதற்கு காரணம் இவர்கள் இருவரும் சேர்ந்த காம்போ தான் அப்படத்தின் ஆணிவேராக அமைந்தது.
தற்போது, நடிகர் கவுண்டமணியை பற்றி சுந்தர்ராஜன் அவர்களின் மனைவியான துர்கா அவர்கள் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார், கவுண்டமணி அவர்கள் சினிமா துறையில் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் எங்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார் என்று கூறியிருந்தார், அப்பொழுது கவுண்டமணி அவர்கள் புதிதாக வீடு கட்டி சென்ற பின்னும் தங்களின் வீட்டை பூட்டு போட்டு எடுத்து சென்று இருவது வருடங்களாக எங்களுக்கு வாடகை கொடுக்காமல் தான் வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார். ஏனென்றால் அந்த வீடு அவருக்கு மிகவும் ராசியானதாக இருந்ததால் அந்த வீட்டை அவர் பூட்டி சாவியை எப்பொழுதும் அவர் கையில் வைத்திருந்தார் என்று தகவல்களை தெரிவித்து இருந்தார் சுந்தர்ராஜனின் மனைவி துர்கா அவர்கள்.