Categories: சினிமா

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

இதற்கிடையில் அவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் சரியாக ஓடாத போது மீண்டும் கலகலப்பு படம் மூலமாக இயக்குனர் ஆனார். அதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.

தற்போது அவர் இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் சுவாரஸ்யமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அனைத்து முன்னணி நடிகர்களோடும் படம் பண்ணிய நீங்கள் ஏன் விஜய்யோடு மட்டும் படம் பண்ணவில்லை எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “விஜய் சார் முழு கதையையும் கேட்டுவிட்டுதான் படம் நடிப்பார். ஆனால் நான் யாரிடமும் கதை சொன்னதில்லை. என்னை நம்பி வரும் ஹீரோக்களை வைத்துதான் நான் படம் பண்ணுகிறேன். அது மட்டுமில்லாமல் எனக்குக் கதையை விலாவாரியாக சொல்லவும் தெரியாது. அதனால்தான் நான் விஜய்யோடு இணைந்து படம் பண்ண முடியாமல் போய்விட்டது.

ஆனால் சிலமுறை அவரோடு படம் பண்ண வேண்டிய சூழல் அமைந்தும் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. கடைசியாக நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன். அதன் முதல் பாதி அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என சொல்லிவிட்டார். நான் அவர் சொன்னது தவறு என நிரூபிக்கும் விதமாக அந்த படத்தை வேறொரு ஹீரோவை வைத்து எடுத்தேன். கடைசியில் விஜய் சொன்னதுதான் உண்மை ஆனது.

அந்த படம் ஓடவில்லை. அது எந்த படம் என்று மட்டும் சொல்லமாட்டேன். அதில் நடித்த ஹீரோவின் மனம் புண்படும்” எனக் கூறியுள்ளார். ஆனால் பலரும் அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் அவர் சொல்லும் படம் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம்தான் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vinoth

Recent Posts

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

12 seconds ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

10 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

15 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

19 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

26 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

31 minutes ago