Categories: CINEMA

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். இது அஜித் ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் 1995ஆம் ஆண்டு முறைமாமன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்று வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரின் இயக்கத்தில் கடந்த மே 3ம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இரண்டே நாளில் 11 கோடி வசூல் செய்திருக்கின்றது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உன்னை தேடி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் மாளவிகா நடித்திருந்தார்கள். ரசிகர்கள் கொண்டாடும் காதல் திரைப்படமாக இப்போது வரை இருந்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடித்த போது அஜித் வலியால் வேதனைப்பட்டதை குறித்து சுந்தர் சி பேசியிருந்தார்.

அவர் தெரிவித்திருந்ததாவது “நம்மால் சாதாரணமாக செய்யும் விஷயத்தை அஜித்தால் செய்ய முடியாது. உன்னை தேடி படத்தில் ஒரு பாடலை ஷூட் செய்வதற்காக நியூஸிலாந்துக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னதாவது, உடனடியாக எனக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும். அந்த டாக்டர் ரிடையராகப் போகிறார். வெளிநாட்டில் செட்டிலாகப் போகிறார். போவதற்கு முன்பு டேட் கொடுத்திருக்கின்றார்.

என் போர்ஷனை ஒரு ஏழு நாளில் நீங்கள் முடித்துக் கொடுத்தால் நான் ஆபரேஷன் செய்து கொண்டு வருவேன். அந்த ஆப்ரேஷன் செய்தால் அது சக்ஸஸ் ஆகுமா இல்லையான்னு தெரியல, ஒருவேளை சக்சஸ் ஆகலைன்னா இனி என் வாழ்க்கை முழுக்க நான் படுத்த படுக்கையா தான் இருக்கணும். ஆனால் அதற்குள் நீங்கள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என்று கூறினாராம்.

அஜித் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிய போது அவரால் எழுந்து கூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. அஜித் சொன்னதை நான் தயாரிப்பாளரிடம் சொல்ல முடியவில்லை. இப்போ நான் சொல்றது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நாம் நடந்தால் அந்த சென்ஸ் மூளைக்கு போய் அடுத்து அடி எடுத்து வைப்போம். அது தானா நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனா அவரு தரையை பாக்கணும். கால் தரையில் பட்டால் அது மூளைக்கு தெரியாது.

முதுகு பிரச்சனைனால அவ்வளவு கஷ்டப்பட்டார். அது மட்டும் இல்லாம அங்கு தண்ணி ஐஸ் மாதிரி இருக்கும். யூனிட்ல இருக்குற எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு போனாங்க. ஆனா அஜித் மட்டும் ஜாலியா நடந்து வந்தார். இதை பார்த்த நான் விளையாட்டா என்ன ஜி உங்க ஹீரோயிசம்க்கு ஒரு அளவே இல்லையா? அப்படின்னு கேட்டேன். அதுக்கு இல்லைங்க என் காலில் சுத்தமா உணர்ச்சி இல்ல” என்று கூறினாராம். இதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டதாக சுந்தர் சி அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

13 mins ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

17 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago