30 வருடங்களாக இயக்குனராக தன்னை நிலைநாட்டி வருபவர் தான் இயக்குனர் சுந்தர் சி. முறை மாமன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி உள்ளதை அள்ளித்தா மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சி ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் அன்பே சிவம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

Sundar c in aranmanai 4
அரண்மனை என்ற படம் மூலமாக குழந்தைகளையும் கவர்ந்தார். அரண்மனை படத்தின் வெற்றியால் இரண்டாம், மூன்றாம் பாகங்களையும் எடுத்து ஹிட் கொடுத்தார். இந்தநிலையில் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வெளியாக உள்ளது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து வரும் சுந்தர் சி யாருக்கும் தெரியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், நானும் நிறைய இடங்களில் பேய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக நாங்கள் ஷூட்டிங்கிற்காக பல இடங்களுக்கு டிராவல் செய்கிறோம், அப்போது பல இடங்களில் தங்குவோம் அப்படி நிறைய இடங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் கூகுளில் சென்று இந்தியாவில் பேய் நடமாட்டம் இருக்கும் இடங்கள் என தேடினால் அந்த ஸ்டுடியோவின் பெயரும் வரும்.

Sundar c talks about his paranormal experience
ஒரு பெரிய ஸ்டுடியோ உள்ளது, அங்கு பல ஹோட்டல்கள் உள்ளது, அதில் ஒரு ஹோட்டலில் மட்டும், குறிப்பாக ஒரு தளத்தில் மட்டும் பேய் நடமாட்டம் உள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த தளத்தில் தான் சூட் ரூம் உள்ளது. அதனால் பல பிரபலங்கள் அதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரபலங்களும் அங்கு தங்கி அதை உணர்ந்துள்ளார். மறுநாளே வந்து வேறு அறை வேண்டும் என கேட்டுள்ளார்கள் என கூறினார். சுந்தர் சி அருகில் இருந்த ராஷி கண்ணாவும், ஆமாம் நானும் உணர்ந்து இருக்கிறேன், எல்லா பிரபலங்களுக்கும் இது தெரியும் என கூறினார்.