Categories: சினிமா

பெரிய ஸ்டார் நடிகையையே வளைத்து போட்ட சுந்தர்.சி.. அடுத்த படத்தில் கார்த்திக்கு ஜோடி இவங்கதானா..?

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக படம் எடுக்கும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். தயாரிப்பாளரிடம் எவ்வளவு பட்ஜெட் என்று சொன்னாரோ அதைவிட குறைவாகத்தான் படத்தை முடித்துக் கொடுப்பார். அதனைப் போல எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்று சொன்னாரோ அதைவிட குறைவான நாட்களில் படத்தை முடித்து விடுவார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி அவரை வைத்து சில மாதங்களில் படப்பிடிப்பை முடித்து விடுவார். இதன் காரணமாகவே அவரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கோலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வரும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான்.

இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் இன்றும் பலருடைய ஃபேவரை திரைப்படமாக உள்ளது. பொதுவாக சுந்தர் சி திரைப்படம் என்றாலே காமெடி கலந்த காதல் கதை இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற நம்பிக்கையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார். ரஜினி, கமல், அஜித், கார்த்திக் மற்றும் விஷால் என பலரையும் வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் நடிக்காத நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான். விஜயை வைத்து பலமுறை படம் எடுக்க முயற்சி செய்தும் சுந்தர்சியால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகவும் சுந்தர் சி நடித்த தொடங்கினார்.

பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தில் நான்கு பாகங்களும் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அரண்மனை 5 படத்தை எடுக்க உள்ளார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் அம்மன் வேதத்தில் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு வடிவேலுவுடன் இணைந்த சுந்தர் சி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் கார்த்தியிடம் சுந்தர் சி ஒரு கதை சொல்லி உள்ள நிலையில் கதை பிடித்து இருந்ததால் கார்த்தி ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் கார்த்தி கையில் நிறைய படங்கள் இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க எனக்கு மூன்று மாதங்கள் மட்டும் கால் சூட் கொடுங்கள் படத்தை முடித்து விடுகிறேன் என்று சுந்தர் சி கூறியதால் கார்த்தி உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கும் எனவும் 2026 பிப்ரவரி மாதம் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தற்போது சுந்தர்சியுடன் இணைந்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்தப் படத்தை முடித்த கையோடு கார்த்தியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

6 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

9 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

13 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

17 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

20 minutes ago