Categories: சினிமா

சினிமாவில் நடிக்க 5000 ரூபாய் பணம் கொடுத்து உதவிய நபர்.. இன்று முன்னணி நடிகராக கலக்கும் சத்யராஜ் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த சம்பவம்..!

Spread the love

வில்லனாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து பிறகு கதாநாயகனாக உயர்ந்து இன்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சத்யராஜ். சத்யராஜை பொறுத்தவரை வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அவருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு வழி அனுப்பி வைக்க அவருடைய குடும்பத்தில் யாரும் முன் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் யாருக்குமே சத்யராஜ் சினிமாவில் நடிப்பதில் விருப்பம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் சத்யராஜ் கையில் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தவர் தான் மாதம்பட்டி சிவகுமார்.

 

இவர்தான் பின் நாட்களில் சின்னத்தம்பி பெரியதம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர். அவருடைய மகன் தான் தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய சூழலில் கையில் வெறும் 500 ரூபாய் இருந்தால் சென்னையில் ஒரு மாத காலம் பொழப்பு நடத்த முடியும். அப்படி இருக்க பத்து மாத காலம் பொழப்பு நடத்தும் அளவுக்கு கையில் பணத்துடன் சத்யராஜ் சென்னைக்கு வந்து இறங்கினார். அப்படி வந்த போது மாதம்பட்டி சிவகுமாரின் நிர்வாகியாக இருந்த திருப்பூர் மணி கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற படத்தை சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க தயாரித்திருந்தார்.

அந்த நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றும் வாய்ப்பு சத்யராஜுக்கு கிடைத்தது. அப்படி அந்த நிறுவனத்தில் சேர்ந்து பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய போது தான் சத்யராஜுக்கு ஒளிப்பதிவாளர் என்.கே. விஷ்வாவின் அறிமுகம் கிடைக்க அதன் மூலம் சட்டம் என் கையில் படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்தியராஜ் சிவாஜி கணேசன், பிரபு மற்றும் மோகன் உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து வந்தார்.

அதன் பிறகு சத்யராஜின் திறமையை அடையாளம் கண்டு அவருடைய கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் தான் இயக்கிய ஜனவரி 1 படத்தில் சத்யராஜுக்கு துணை நடிகராக வாய்ப்பு வழங்கினார். 24 மணி நேரம் மற்றும் நூறாவது நாள் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் கதாநாயகர்களை விட அதிகம் கவனிக்கப்பட்டார். சத்யராஜை வைத்து மொத்தம் 25 திரைப்படங்களை மணிவண்ணன் இயக்கிய நிலையில் இதில் 17 படங்களில் வில்லனாக நடித்திருந்தார். வில்லனாக வெற்றி பெற்ற சத்யராஜ் ஹீரோவாக மாறுவதில் அவருக்கு நிறைய சவால்கள் இருந்தது.

இயக்குனர்களும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க தயங்கிய நிலையில் அந்த சமயத்தில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை மற்றும் கடலோர கவிதைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்தத் திரைப்படம் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக நிருபித்த சத்யராஜ் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கிய நிலையில் ஒரு கட்டத்தில் 2 கே நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தற்போதும் பழமொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் அன்று வெறும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தோடு சென்னைக்கு வந்து இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை போற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய திறமையும் அயராத உழைப்பும்தான்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago