தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களைப் போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, மகாநதி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், நான் நீ காதல் உள்ளிட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல சன் டிவியில் ஏகப்பட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
பெண்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்த வாரத்துடன் தொடர் முடிந்துவிடும் என்று பலரும் கூறுகிறார்கள். கிளைமாக்ஸ் காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் தொடர் முடிவுக்கு வருவதால் அந்த இடத்தை நிரப்புவதற்கு டாப் சீரியலின் நேரத்தை மாற்றி இருக்கின்றது சன் டிவி. அதாவது சிங்க பெண்ணே தொடர் சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். எட்டு மணிக்கு இனி புதிதாக தொடங்க இருக்கும் மருமகள் சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது. இந்த செய்தி சிங்க பெண்ணே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது.