சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் மறுபக்கம் சன் டிவி மக்களை கவரும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே பெரும் போட்டி நிலவி வரும் நிலையில் சன் டிவி தற்போது ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்குவதாக ப்ரோமோ வெளியிட்டு உள்ளது. அந்த ப்ரோமோவில் யார் அந்த அக்கா என guess செய்யும்படி கூறியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறது.

அதனால் இது புது ரியாலிட்டி ஷோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்த அக்கா யார் என்ற கேள்வி வைரலாகி வரும் நிலையில் அது மணிமேகலை தான் என நெட்டிசன்கள் தெரிவித்து வர மறுபக்கம் அது சிவாங்கியாக இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர். தற்போது அது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
