Connect with us

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

CINEMA

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

 

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சன் டிவியிலும் செஃப் வெங்கடேஷ் பட்டை வைத்து டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கினர். பழைய சீரியல்களை முடித்து புதுப்புது சீரியல்களை சன் டிவி களமிறக்குகிறது.

சன் டிவியில் விரைவில் புதிய சீரியல்.. ஹீரோயின் இந்த பிரபலமா? - தமிழ் News - IndiaGlitz.com

   

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மருமகள் சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. புதிய சீரியலான அனாமிகா, மல்லி ஆகிய சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் மற்றொரு புதிய சீரியல் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்ட ப்ரோமோ வெளியானது. அந்த வகையில் சன் டிவியில் மணமகளே வா என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவியில் விரைவில் புதிய சீரியல்.. ஹீரோயின் இந்த பிரபலமா? - தமிழ் News - IndiaGlitz.com

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியலில் ஹரிகா சாது ஹீரோயினாக நடித்தார். அந்த சீரியல் 2020-ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹரிகா. இந்த நிலையில் மணமகளே வா என்ற புதிய சீரியலில் இவர்தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சன் டிவியில் புத்தம் புது சீரியல்.. யார் ஹீரோயின் தெரியுமா? | Tamil Cinema News

ப்ரோமோ வீடியோவில் தனது வீடு தான் சொர்க்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகிக்கு தந்தை ஒரு பிரச்சனையில் இருப்பது தெரிய வருகிறது. அந்த பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் சீரியலின் மையக்கதை. மற்ற சீரியல்கள் போலவே மணமகளே வா சீரியலும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் தொடங்கும் தேதியும் நேரமும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top