TRP-ஐ ஏற்ற புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. கிராமத்து பெண்ணாக விஜய் டிவி நடிகை…!!

By Nanthini on ஆவணி 13, 2024

Spread the love

சன் டிவியில் தொடர்ந்து புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பி யில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இதன் காரணமாக இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங் வரக்கூடிய தொடர்களை விரைவில் முடித்துவிட்டு புது தொடர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

   

அதன்படி விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவாதி தற்போது சன் டிவியில் களமிறங்குகின்றார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அடுத்த திங்கள் முதல் சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ஸ்வாதி நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

   

 

பாவாடை தாவணி என பக்கா கிராமத்து பெண் ரோலில் அவர் உள்ளார். வானத்தைப்போல சீரியலுக்கு பதில் இந்த தொடர் இரவு 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அது தொடர்பான ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.