தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் சமூக வலைதளங்களிலும் எதிரொலித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு, சன் நியூஸ் தொலைக்காட்சி ஒரு வினோதமான புகைப்படத்தைப் பயன்படுத்திப் பதிலடி கொடுத்துள்ளது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு அணைகள் குறித்த தன் அறிவைப் பற்றிப் பேசுகையில், “ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROV) கொண்டு நீருக்கு அடியில் அனையை ஆராய்வது பற்றி நான் படித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். விஜய்யின் இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சைக் கிண்டல் செய்யும் விதமாக, சன் நியூஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் ‘சுறா’ திரைப்படத்தில் கடலில் இருந்து வெளியே வருவது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுச் செய்தியைப் பகிர்ந்துள்ளது.
சன் நியூஸ் இத்தகைய கிண்டல் பதிவுகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகச் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசும்போது, “எந்தக் கொம்பனுக்கும் நான் அஞ்சமாட்டேன்” என்ற தொனியில் கர்ஜித்தார். அதற்குப் பதிலடியாக, ‘தலைவா’ பட ரிலீஸ் சிக்கலின்போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க விஜய் கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருந்த பழைய புகைப்படத்தைப் பதிவிட்டு சன் நியூஸ் வம்புக்கு இழுத்திருந்தது.
தற்போது விஜய்யின் அணை குறித்த பேச்சுக்கு ‘சுறா’ புகைப்படத்தைப் பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “யோவ் சன் நியூஸ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்யா!” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகையும், திமுகவுக்கு எதிரான அவரது தீவிரமான பிரச்சாரமும் சன் நியூஸ் போன்ற ஊடகங்களின் இத்தகைய ‘ட்ரோல்’ கலாச்சாரத்திற்குத் தீனி போட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…