தமிழ் திரை உலகில் தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவை பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சுமன் ஷெட்டி. தற்போது மாறிய தோற்றத்துடன் மீண்டும் இவர் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். கதாநாயகனின் நண்பனாக நடித்த இவர் சிரிப்பு, சோகம் மற்றும் காதல் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை கவர்ந்தார்.
அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, தாஸ், குத்து மற்றும் தோரணை உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பிறகு இவர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். சில ஆண்டுகளாக தமிழில் அதிகமாக நடிக்காமல் இருந்த இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
அந்த வீடியோவில், நான் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறேன், எனக்கு ரசிகர்கள் ஆதரவு தேவை என்று வேண்டுகோள் விடுத்து வீடியோவை பதிவிட்டுள்ளார். நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் சுமன் ஷெட்டி போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். அவருடன் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இது அவருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் ஒன்பதாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுமன் ஷெட்டி கலந்து கொள்வது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…