#image_title
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்த்தை பெறவில்லை. அவருக்கு அப்படி ஒரு அந்தஸ்த்தைப் பெற்றுத்தந்த படம் என்றால் அது அவர் இயக்கத்தில் உருவான தூரல் நின்னு போச்சு திரைப்படம்தான்.
#image_title
அந்த படத்தில் அவரோடு சுலக்ஷனா, செந்தாமரை, நம்பியார் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் சுலக்ஷனாவுக்கு இடையிலானக் காதல் காட்சிகள் சிறப்பாக அமைந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமில்லாமல் பாக்யராஜ் மற்றும் சுலக்ஷனா ஆகியோரை இணைத்து வைத்து கிசுகிசுக்களும் வெளியாகின.
இதுகுறித்து தற்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் சுலக்ஷனா. அதில் “அப்போது நான் பாக்யராஜ் சாரிடம் சரியாகப் பேசக்கூட மாட்டேன். அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். அவரை எனக்கு அப்போது பிடிக்கவும் பிடிக்காது” எனக் கூறியுள்ளார். இதே போல பாக்யராஜ் மற்றும் வடிவுக்கரசியை இணைத்து வைத்தும் கிசுகிசுக்கள் பரவியதாக சொல்லப்படுவதுண்டு.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…