தனித்துவமான குரல்வளம் கொண்ட சுக்வீந்தர் சிங்கின் 7 பாடல்கள்.. விஜய்க்கு கிரீடமாக அமைந்த ‘அர்ஜுனரு வில்லு’ Song..

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் குறைந்த பாடல்களையே பாடியிருந்தாலும் ஒரு சிலரின் குரல் யாராலும் மறக்க முடியாததாக இருக்கும். இந்தப் பாடல்களை இவர்கள் தான் பாடியிருக்கிறார்களா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு தங்களது தனித்துவ குரலால் ரசிகர்களை கொள்ளையடித்து இருக்கும் பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் சுக்வீந்தர் சிங். பாலிவுட் பாடகரான இவர், தமிழில் ஒரு சில பாடல்களையே பாடியுள்ளார். அப்படி இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே நமது ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் சுக்வீந்தர் சிங் பாடல்களை பார்க்கலாம்..

   

1. உயிரே :

1998-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘உயிரே’. என்ன தான் இது பாலிவுட் படம் என்றாலும், தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்படி கேட்டவுடன் அனைவரையும் நடனமாட வைக்கும் பாடலான ”தையா தையா” பாடலை பாடியது சுக்வீந்த சிங். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்தப் பாடலை இன்று கேட்டாலும் நிச்சயம் நம்மை தாளம் போட வைக்கும்.

2. ஹலோ :

1999-ம் ஆண்டு செல்வ பாரதி இயக்கத்தில் பிரசாந்த் உட்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஹலோ’. இப்படத்தில் பிராந்தின் ஓப்பனிங் பாடலான ”சலாம் குலாம்” பாடலை பாடியது சுக்வீந்தர் சிங். கானா பாடலின் கிங் மேக்கரான தேவா இசையில் உருவான இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஃபேவரைட்.

3. வானத்தைப் போல :

2000-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, கௌசல்யா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ’வானத்தைப் போல’. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் இன்று கேட்டாலும் கூட மகிழ்ச்சியை தரக் கூடியது. இதில் பிரபுதேவா மற்றும் கௌசல்யா இணைந்து டூயட் ஆடிய ”நதியே என் நைல் நதியே” பாடலை பாடியது சுக்வீந்த சிங். எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. பெண்ணின் மனதை தொட்டு :

2000-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் பிரபுதேவா, ஜெயா சீல், சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ’பெண்ணின் மனதை தொட்டு’. எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் ”ஏ சால்டு கொட்டை” பாடலை பாடியது சுக்வீந்தர் சிங்.

5. கில்லி :

2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ’கில்லி’. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்பு முனை என்றும் கூறலாம். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே பட்டிதொட்டி எங்கும் பிரபலம் குறிப்பாக விஜய்க்கான மாசான பாடலான ”அர்ஜூனரு வில்லு” பாடல் எப்போது கேட்டாலும் நல்ல வைப் கொடுக்கும். வித்யாசாகர் இசையில் உருவான இந்தப் பாடலை பாடியது சுக்வீந்தர் சிங்.

6. டிஷ்யூம் :

2006-ம் ஆண்டு சசி இயக்கத்தில் ஜீவா, சந்தியா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’டிஷ்யூம்’. சினிமாவில் ஒரு ஸ்டண்ட் பயிற்சியாளர்களின் பணி எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டியது இப்படம். இப்படத்தில் இடம் பெற்ற ”கிட்ட நெருங்கி வாடி கர்லாக்கட்ட உடம்பு காரி” என்ற குத்து பாடலை பாடியது சுக்வீந்தர் சிங். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஈசன் :

2010-ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் அபிநயா, சமுத்திரகனி, வைபவ் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஈசன்’. இப்படத்தில் இடம் பெற்ற கிளப் பாடலான ”இந்த இரவு தான் போகுதே” என்ற பாடல் தான் சுக்வீந்தர் சிங் தமிழில் பாடிய கடைசிப் பாடல். இப்படத்திற்கு இசையமைத்திருந்தது ஜேம்ஸ் வசந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana