உங்க வீட்டு பெண் குழந்தைக்கு ரூ.46 லட்சம் தரும்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்.. விவரம் இதோ..!

By Nanthini on புரட்டாதி 9, 2024

Spread the love

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஒரு சிறப்பான திட்டம் ஆகும். இதன் மூலம் தங்களுடைய பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை தங்களுடைய குழந்தைகள் 10 வயது எட்டும் போது கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தில் குழந்தைகளின் காவலர்கள் இணைய SSY கணக்கை திறப்பது அவசியம்.

   

மேலும் இந்தத் திட்டத்திற்கு வரி விலக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்யும் போது அதிகபட்ச வரம்பாக 1.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது 8.20% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கடந்த காலாண்டு முதலில் இருந்து இந்த வட்டி விகிதம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 250 ரூபாயும் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயும் முதலீடு செய்ய முடியும்.

   

 

குறிப்பாக ஒரு வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கை திறக்க முடியும். ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஒரு வருடத்தில் மொத்தமாக 60 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். இதற்கு வழங்கப்படும் 8 புள்ளி 2 சதவீதம் வட்டி விகிதத்துடன் 15 வருடத்தில் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு இருக்கும். இதற்கான வட்டியும் சேர்த்து 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் முதிர்வு தொகையாக 27.92 லட்சம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யும்போது 15 வருடங்களில் மொத்த முதலீடாக 15 லட்சம் ரூபாய் முதலீடாக இருக்கும். அதற்கான வட்டி விகிதமும் சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக 46.53 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்களாக இருந்தால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.