தமிழ் சினிமா இப்படிதான் ஓடிகிட்டு இருக்கு… இந்த நிலை மாறனும்… பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை மணி அடித்த சுஜாதா!

By vinoth on பிப்ரவரி 12, 2025

Spread the love

எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறை மேல் கடுமையான விமர்சனமும் அதிருப்தியும் இருந்தது. அதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதே போல அவரது சில நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவுமே சுஜாதாவுக்கு திருப்திகரமாக இல்லை என்று அவரே வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் இயங்கி வந்தார். அதே நேரத்தில் அவர் தமிழ் சினிமா பற்றி வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக் கொண்டதில்லை.

   

குறிப்பாக தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்து வைக்கப்படும் கிளிஷேவான காட்சிகள் குறித்து ஒருமுறை அவர் சொன்னது குறிப்பிடத்த்க்கது.  இந்நிலையில் இந்த பதிவில் அவர் தமிழ் சினிமாவில் கடைபிடிக்கப்படும் ஒரு மோசமான விஷயம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை பதிவு செய்துள்ளார்.

   

 

அப்படி அவர் புத்தகத்தில் பதிவு செய்த விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. அதில் “என்னை நிறைய பட பூஜைகளுக்கு அழைப்பார்கள். நான் சென்றதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை பிரித்துப் பார்ப்பேன். அதில் டைட்டில் மட்டும்தான் இருக்கும். என்ன என்று கேட்டால் இனிமேல்தான் திரைக்கதை எழுதனும் என்பார்கள். தமிழ் சினிமாவின் இந்த நிலை மாறனும். இப்படி ஷூட்டிங் போனால் எப்படி அந்த படம் வெற்றி பெறும்.

ஆனால் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் எல்லாம் திரைக்கதையில் பிள்ளையார் சுழி முதல் முற்றும் வரை போட்டபின்னர்தான் ஷூட்டிங்குக்கு செல்வார்கள். அதனால்தான் அவர்கள் படம் வெற்றி பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.