ஏசி வாங்கித் தராததால் ஆத்திரம்… கணவரிடம் சண்டையிட்டு தற்கொலை செய்த மனைவி… திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

திருவள்ளூரில் ஏசி வாங்கித் தராததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த மோனிகா (24), வெயில் கொடுமை தாங்க முடியாமல் தனது கணவர் ஆகாஷிடம் ஏசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஏசி வாங்கித் தருவதில் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோனிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தனது மகள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.