லவ் மேரேஜ் செய்த கையோடு தற்கொலை… 15 நாட்கள் தான் வாழ்ந்தார்.. சுற்றும் முன் கருகிய காதல்… சாவிற்கு முன் அந்தப் பெண் எழுதிய உருக்கமான கடிதம்…!!!

By Rajeshwari on பங்குனி 29, 2026

Spread the love

மும்பையில் காதலித்து கரம் பிடித்த 15 நாட்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலனை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண், மணவாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மேலும் தனது மரணத்திற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பில், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த கடும் மன உளைச்சலும், வரதட்சணை கொடுமைகளுமே இதற்குக் காரணம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து மணந்த பெண்ணை பாதுகாப்பார் என்று நம்பிய கணவரே, அந்தப் பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் தகவல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்கொலை குறிப்பில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு அழகான காதல் கதை திருமணத்திற்குப் பின் வெறும் 15 நாட்களில் இப்படி ஒரு துயரமான முடிவைச் சந்தித்தது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.