“சீட் இல்லன்னா விலகிடுவேன்!” பிரேமலதாவை மிரட்டிய சுதீஷ்..? தேமுதிகவில் வெடித்த வாரிசு அரசியல் சர்ச்சை

By Soundarya on பங்குனி 11, 2026

Spread the love

தேமுதிகவில் எல்.கே.சுதீஷுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. முதலில் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த ஒரு மூத்த நிர்வாகிக்கு இந்த சீட்டைக் கொடுக்க தேமுதிக தலைமை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சி மீது பொதுமக்களுக்கு இருக்கும் நன்மதிப்பை உயர்த்தலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கணக்குப் போட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், இந்த முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சிக்காகப் பல ஆண்டுகளாகத் தான் ஆற்றியப் பணிகளைக் குறிப்பிட்டு, தனக்கு எம்பி சீட் வழங்கப்படாவிட்டால் கட்சியிலிருந்து விலக நேரிடும் எனச் சுதீஷ் வலியுறுத்தியதாகப் பேசப்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாகவே, மூத்த நிர்வாகிகளுக்குப் பதிலாகச் சுதீஷுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

   

குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற விமர்சனத்தைத் தவிர்க்க முதலில் மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பிரேமலதா முயன்றார். ஆனால் சுதீஷின் பிடிவாதமான நிலைப்பாட்டால், கட்சிக்குள் விரிசல் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.