ஹரியானா மாநிலத்தில் போலீஸ் ஐஜி ஆக பணிபுரிந்து வந்த ஒய். பூரன் குமார் ஐபிஎஸ் ரோகத் சரக ஐஜியாக பணியாற்றிய நிலையில் சமீபத்தில் போலீஸ் மையத்தின் பயிற்சியாளராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தன்னுடைய வீட்டில் துப்பாக்கியா சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த அவர் காவல்துறையில் சாதிய பாடுபட்டால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பூரன் குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவித் துணை ஆய்வாளர் சந்தீப் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
ரோஹ்தக் சைபர் செல்லில் ஏ.எஸ்.ஐயாக பணிபுரிந்த சந்தீப் குமார் தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் . மேலும் அவர் தற்கொலை கடிதம் மற்றும் வீடியோ ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில், உண்மைக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்த நேர்மையின் பக்கம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். தேசத்தை விழிப்படைய செய்ய இதுவே தேவை என்று கூறியுள்ளார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார் ஒரு ஊழல்வாதி. தன்னுடைய ஊழல் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் தான் அவரை தற்கொலை செய்து கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதுபான ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து பூரன் குமாரின் காவலர் 2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய போது தான் பிடித்ததாகவும் இந்த விவகாரம் வெளியான போது பூரன்குமார் தன்னுடைய ஊழலை மறைக்க சாதி அரசியலை கையில் எடுத்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .மேலும் இந்த விவகாரம் சாதி தொடர்பானது இல்லை. முழுக்க முழுக்க ஊழல் தொடர்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.
