அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு… விஜயை நேரில் சந்திக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்… இன்று தமிழக அரசியலில் வெடிக்கும் பூகம்பம்…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள், அக்கட்சியில் மிகப்பெரிய தலைமை மாற்றத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததால், அவர் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் எதிரொலியாக, கட்சியின் சட்டசபை குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. இபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான எம்எல்ஏக்களே பங்கேற்ற நிலையில், அதிருப்தி குழுவினர் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அக்கட்சியைக் பிளவுபடுத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

மறுபுறம், அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் பரவும் தகவல்கள் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு இபிஎஸ்-க்கு குறைந்து வரும் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இரு தரப்பும் பிடிவாதமாக இருப்பதால் கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த உட்கட்சிப் பூசலுக்கு இன்று மாலைக்குள் சுமூகத் தீர்வு காணப்படாவிட்டால், நாளை நடைபெறவுள்ள எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் இந்த மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டு, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.