“பெண்களுக்கான 100 சிறப்பு பேருந்துகள் திடீர் நிறுத்தம்…? பரவிய காட்டுத்தீ வதந்தி… தமிழக அரசு அதிரடி விளக்கம்…!”

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என தமிழக அரசின் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம், பெண்கள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்து மாதம் ரூ.888 வரை சேமித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பெண்களுக்காக இயக்கப்படும் பிரத்யேக பிங்க் நிற சிறப்பு பேருந்துகளில் 100 பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக அண்மையில் வதந்திகள் பரவின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், கடந்த மார்ச் மாதத்திலிருந்து மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்பட்டு வரும் 1,724 பேருந்துகளின் எண்ணிக்கை தற்போதும் குறைக்கப்படவில்லை என்றும், அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் தடையின்றி இயங்கி வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

   

மறுபுறம், நெல்லை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ என்ற பெயரில் உள்ள ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக எழுந்த சர்ச்சைக்கும் போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது. அரசு தரப்பில் எந்தவிதப் பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல் தோன்றியிருந்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.