அடடே… தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்… இடைக்கால நிவாரணம் வாங்க திடீர் விதிமுறை… நிதித்துறை அதிரடி அறிவிப்பு…!!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

தமிழ்நாடு அரசின் நிதித்துறை, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 01.01.2026 முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான இடைக்கால நிவாரணம் வழங்கும் நடைமுறைகள் குறித்துக் கூடுதல் தெளிவுரைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, இடைக்கால நிவாரணம் கணக்கிடக் கருத்துரு ஊதிய உயர்வு சேர்க்கப்படாமல், ஓய்வுபெறும் மாதத்தில் பெறப்பட்ட உண்மையான கடைசி ஊதியத்தின் அடிப்படையிலேயே 30% நிவாரணம் கணக்கிடப்படும். மேலும், நிவாரணம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை ஒரே ஒருங்கிணைந்த கணக்குத் தலைப்பின் கீழ் ‘களஞ்சியம்’ போர்ட்டல் மூலம் வழங்கப்படும் என்றும், கணக்கீட்டின் போது பைசாவில் வரும் தொகைகள் அடுத்த முழு ரூபாயாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் இடைக்கால நிவாரணத்தைப் பெற்ற பிறகு மரணமடைந்தால், அவர் இறந்த நாளுக்குப் பிந்தைய உபரித் தொகை குடும்ப இடைக்கால நிவாரணத்தில் சரிசெய்யப்படும். ஒருவேளை விருப்ப உரிமை அளிப்பதற்கு முன்பே ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், அவருடைய குடும்ப உறுப்பினருக்கு மாதாந்திர குடும்ப நிவாரணத்தைத் தேர்வு செய்யும் அல்லது இத்திட்டத்திலிருந்து விலகும் உரிமை வழங்கப்படும். உரிமை கோருபவர் யாரும் இல்லாதபட்சத்தில், அத்தொகை குறித்த விவரங்கள் காலாண்டு அடிப்படையில் அரசிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும்.

   

மாதாந்திர நிவாரணம் மற்றும் குடும்ப நிவாரணத் தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் படி மூலத்திலேயே வரி பிடித்தம் செய்யப்படும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த இடைக்கால நிவாரணங்களை அனுமதிப்பதில் குழப்பமின்றி ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றுவதை உறுதி செய்ய, மாதிரி அனுமதி ஆணைப் படிவங்களை நிதித்துறை தயாரித்து அனுப்பியுள்ளது.