திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட்… ராஜேஷ்குமார் எம்.பி-க்கு எம்.எல்.ஏ சீட்?… நாமக்கல்லில் செம ஸ்கெட்ச்..!!!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் வேட்பாளர் தேர்வு மற்றும் விருப்பமனு தாக்கல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமாக ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ராஜேஷ்குமார் எம்.பி.யாக இருந்து கொண்டே எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராஜேஷ்குமார் விருப்பமனு தாக்கல் செய்ய வந்தபோது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் திரளான அளவில் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் ஊர்வலமாக அண்ணா அறிவாலயத்திற்கு வந்த அவர்கள், ராஜேஷ்குமாரே நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாகவும் விருப்பமனுக்களை அளித்தனர். ஏற்கனவே முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வனும் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், நாமக்கல் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

1 மணத்தியாலம் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

1 மணத்தியாலம் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

1 மணத்தியாலம் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago