தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
